சென்னையில் ‘சுற்றுலா சிறப்பு கருத்தரங்கு 2026’ தொடக்கம்!
சென்னையில் உள்ள கிராண்ட் சோழா ஹோட்டலில், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் நடத்தும் ‘சுற்றுலா சிறப்பு கருத்தரங்கு 2026’ இன்று காலை ஆரம்பமாகியுள்ளது. கருத்தரங்கின் துவக்க நிகழ்ச்சியில் கபில் மிஸ்ரா கலந்து, “தலைநகரின் ஏழு வரலாறுகள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.

அவரின் உரையில், நகருக்கு வருவோர் சுற்றுலாப் பயணிகளுக்கு குறைந்தபட்ச பாதுகாப்பை வழங்குவது, நகரின் கண்ணோட்டத்தை சரியாக வெளிப்படுத்துவது முக்கியம் எனக் குறிப்பிட்டார். தில்லியில் காற்று மாசுபாடு மற்றும் நதி நீர் மாசுபாடு பிரச்சனைகள் உள்ளன; இதனைத் தடுக்க மத்திய அரசு, மாநில அரசு மற்றும் பல நிறுவனங்கள் இணைந்து செயல்படுவதாகவும் தெரிவித்தார்.

மிஸ்ரா மேலும், வருங்காலத்தில் நதிகளை சுத்தமாக வைத்துக்கொள்வது, மக்களை நதியுடன் இணைப்பது, தலைநகரில் சொகுசுப் படகு சேவையை பிப்ரவரி அல்லது மார்ச் மாத இறுதியில் தொடங்குவது, சர்வதேச தரநிலைக்கு ஏற்ப நகரில் புதிய சுற்றுலா அனுபவங்களை உருவாக்கும் திட்டங்கள் தயாராக உள்ளன என அறிவித்தார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
