பாரா கிளைடிங் சாகசத்தில் கீழே விழுந்து வீரர் பலி - சுற்றுலா பயணி உயிர் தப்பினார்!
சிம்லா: பாரா கிளைடிங் சாகச விளையாட்டிற்குப் பெயர் பெற்ற இமாசல பிரதேசத்தின் பிர் பில்லிங் பகுதியில், இன்று நிகழ்ந்த விபத்தில் அனுபவம் வாய்ந்த வீரர் மோகன் சிங் உயிரிழந்தார்.
இமாசல பிரதேசத்தின் காங்க்ரா மாவட்டத்தில் உள்ள பிர் பில்லிங் தளம் உலகளவில் பாரா கிளைடிங்கிற்குப் புகழ் பெற்றது. இன்று காலை, மோகன் சிங் என்ற சாகச வீரர், ஒரு சுற்றுலாப் பயணியைத் தனது பாராசூட்டில் அமரவைத்து ஆகாயத்தில் பறந்து கொண்டிருந்தார்.

பறந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக பாராசூட்டில் திடீர் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த பாராசூட், உயரத்தில் இருந்து வேகமாகத் தரையை நோக்கி விழுந்தது.
கீழே விழுந்ததில் மோகன் சிங்கிற்கு உடல் முழுவதும் பலத்த காயங்கள் ஏற்பட்டன. உடனடியாக அவரை மீட்ட பொதுமக்கள் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அதிர்ஷ்டவசமாக அவருடன் சென்ற சுற்றுலாப் பயணி சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார். அவருக்குத் தற்போது முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்துப் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்திற்குத் தொழில்நுட்பக் கோளாறு காரணமா அல்லது மனிதத் தவறுகள் ஏதேனும் நடந்ததா? என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. பிர் பில்லிங் போன்ற சர்வதேச தரத்திலான சாகச மையங்களில் பாதுகாப்பு நெறிமுறைகள் (Safety Protocols) முறையாகப் பின்பற்றப்படுகிறதா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
