கோர விபத்து... பயணிகளுடன் சுற்றுலா விமானம் விழுந்து நொறுங்கியதால் பரபரப்பு!

 
விமான விபத்து

என்ன தான் நவீன தொழில்நுட்பம், பாதுகாப்பு அம்சங்கள் இருந்தாலும் அவ்வப்போது விமான விபத்துகள் ஏற்பட்டு பலரும் உயிரிழக்கும் நிகழ்வு தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில், நேற்று சுவிட்சர்லாந்து நியூசெட்டல் மலைப்பகுதியில் சுற்றுலா விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் பலர் உயிரிழந்ததாக அதிர்ச்சிதரும் தகவல் வெளிவந்துள்ளது. 

விமான விபத்து

பிரான்ஸ்-சுவிஸ் எல்லைக்கு அருகில் உள்ள Ponts-De-Martel என்ற இடத்தில், சுற்றுலா விமானம் பறந்தபோது திடீரென கட்டுப்பாட்டு மையத்துடன் இருந்த தொடர்பு துண்டித்தது. இதனையடுத்து உள்ளூர் நேரப்படி காலை 10:20 மணியளவில் நியூசாடெல் மலைகளில் உள்ள வனப்பகுதியில் விமானம் விழுந்து விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. விமானம் விபத்துக்குள்ளானதாக உள்ளூர் காவல்துறை உறுதிப்படுத்தியது.  

இதனையடுத்து தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை குழுக்கள் விபத்து நடந்த இடத்துக்கு விரைந்தனர். இந்த விபத்தில் விமானியும் இரண்டு பயணிகளும் உயிரிழந்ததாகவும், மொத்தமாக பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய கூடுதல் விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

விமான விபத்து

விபத்து குறித்து பயணிகளின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும், விமானத்தில் எத்தனை பயணிகள் இருந்தனர், எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பது குறித்த கூடுதல் தகவல்களை வெளியிடுவோம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.  அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விமான விபத்துக்கு வழிவகுத்தது குறித்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!


 

From around the web