புலிகள் கணக்கெடுப்பு முடிந்தது... சொரிமுத்து அய்யனார் கோயில், அகத்தியர் அருவிக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி!

புலிகள் கணக்கெடுக்கும் பணி நிறைவடைந்ததால், திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள சொரிமுத்து அய்யனார் கோயில் மற்றும் அகத்தியர் அருவிக்கு செல்ல இன்று முதல் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது.
முன்னதாக புலிகள் கணக்கெடுப்பு பணிகள் காரணமாக பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் நடைபெற்ற புலிகள் கணக்கெடுப்பு பணி நிறைவடைந்ததைத் தொடர்ந்து மீண்டும் பாபநாசம் சோதனைச்சாவடி திறக்கப்பட்டு, பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தற்போது பொதுத்தேர்வுகள் துவங்கியுள்ள நிலையில், விடுமுறையில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் இந்த பகுதியைச் சுற்றியுள்ள அருவிகளில் குளித்து மகிழவும், சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கும் குவிவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!