சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்... மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி!

 
மணிமுத்தாறு

தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில்  அம்பை அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில்  மணிமுத்தாறு அருவி அமைந்துள்ளது. இந்த அருவி உலகப்பிரசித்தி பெற்றது.  ஆண்டு முழுவதும் தண்ணீர் விழும் இந்த அருவியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் உற்சாகமாக கும்மாளமிட்டு குளித்து மகிழ்வது வழக்கம். 

மணிமுத்தாறு

இந்நிலையில், நெல்லை மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக மணிமுத்தாறு அருவிக்கான நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க தடை விதித்து வனத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.  

மணிமுத்தாறு அருவி

இந்நிலையில், மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து சீரானதால், 4 நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.இதனால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமடைந்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?