சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்... பொதுமக்கள் மீண்டும் கண்ணாடி பாலம் பயன்படுத்த அனுமதி!
தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் திருவள்ளுவர் சிலை - விவேகானந்தர் பாறையை இணைக்கும் கண்ணாடி இழைப் பாலம் மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்குத் திறந்து விடப்பட்டுள்ளது.

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை - விவேகானந்தர் பாறையை இணைக்கும் கண்ணாடி இழைப் பாலம் பராமரிப்பு பணி காரணமாக கடந்த 5 நாட்களாக பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருந்தது. கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறையில் இருந்து திருவள்ளுவர் சிலைக்குச் செல்வதற்கு இந்தியாவிலேயே முதல்முறையாக கண்ணாடிப் பாலம் அமைக்கப்பட்டு கடந்தாண்டு இறுதியில் திறக்கப்பட்டது.

பராமரிப்புப் பணிகளுக்காக கடந்த சில நாள்களாக மூடப்பட்ட கண்ணாடிப் பாலம் இன்று மக்கள் மீண்டும் திறக்கப்பட்டது. ஆய்வுப் பணிகள் நிறைவடைந்த நிலையில் கண்ணாடி கூண்டு பாலத்தில் இன்று சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
