சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சி!! இன்று முதல் சுற்றுலா கட்டணம் உயர்வு!!

 
கன்னியாகுமரி

அதிகாலை கடலில் இருந்து சூரியன் எழுவதை கன்னியாகுமரியில் காண கண் கோடி வேண்டும். இங்கு வருடத்தின் அனைத்து நாட்களும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும். இந்தியாவின் மற்ற மாநிலங்களில் இருந்து மட்டுமல்ல , உலகம் முழுவதிலும் இருந்தும் பயணிகள் வந்த வண்ணம் இருப்பர். சுற்றுலாத் தலமாக விளங்கும் கன்னியாகுமரியில் திருவள்ளூர் சிலை, விவேகானந்தர் மண்டபம் என  பல்வேறு இடங்கள் உள்ளன. இவற்றை சுற்றி பார்க்க பூம்பூகார் கப்பல் போக்குவரத்து கழகம் கட்டணம் நிர்ணயித்துள்ளது. இந்த கட்டணத் தொகை இன்று முதல் உயர்த்தப்பட்டுள்ளதாக  பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

கன்னியாகுமரி


அதன்படி, விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளூர் சிலைக்கு இயக்கப்படும் படகிற்கான கட்டணம்  ரூ.50ல் இருந்து ரூ.75ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதே போல் புதிய சிறப்பு கட்டணம் ரூ.200ல் இருந்து ரூ.300ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. கொரோனா காலத்திற்கு பிறகு சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை  நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் தொடர் விடுமுறை விடப்பட்டால் கூட்டம் வழக்கத்தை விட அதிக அளவில் கானப்படும். பள்ளிகளில் தேர்வுகள் முடிவடைந்து விடுமுறை நாட்களில் கன்னியாகுமரி வர பலரும் இப்போதே டிக்கெட்டுகளை ரிசர்வ் செய்து விட்டனர். இங்கு வரும் சுற்றுலாப்பயணிகள் சூரிய உதயத்தை காணவும், விவேகானந்தை நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு படகு சவாரி செய்தும் வருகின்றனர். இந்நிலையில், புதிய கட்டணமாக இன்று முதல் ரூ.300ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி திரௌபதி முர்மு

நாளை மார்ச் 18ம் தேதி சனிக்கிழமை இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தமிழகத்தில் கன்னியாகுமரி வருகை தர உள்ளார். தற்போது  கேரளாவின் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இதன் பிறகு நாளை தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார் மூலம் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்துக்கு செல்கிறார்.  தனி படகு மூலம் விவேகானந்தர் நினைவு மண்டபம் சென்று பார்வையிடுகிறார். அங்கிருந்தபடி திருவள்ளுவர் சிலையையும் பார்வையிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பின்னர் விவேகானந்த கேந்திரா சென்று பாரத மாதா கோயிலில் வழிபடுகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்ததும் அரசு விருந்தினர் மாளிகைக்கு திரும்புகிறார். ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு குமரியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலும், நாளை கன்னியாகுமரியின் முக்கிய சுற்றுலாத் தலங்களுக்கு வர சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web