நச்சுக் காற்று … சுவாச நோயால் 9000க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

 
டெல்லி மாசு காற்று வாகனம் பனி
 

டெல்லி அரசின் சமீபத்திய புள்ளிவிவரங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2024-ம் ஆண்டில் சுவாசம் தொடர்பான நோய்களால் 9,211 பேர் உயிரிழந்துள்ளனர். இது 2023-ம் ஆண்டை விட சுமார் 4.6 சதவீதம் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூச்சு திணறும் தமிழகம்!! முக்கிய நகரங்களில் அதிகரித்த காற்று மாசு!!

உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் ஆஸ்துமா, நிமோனியா, நுரையீரல் தொற்று, காசநோய் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள். டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடும், குளிர்காலங்களில் நிலவும் கடும் பனியும் முதியவர்கள் மற்றும் குழந்தைகளின் உடல்நலனை கடுமையாக பாதிப்பதாக கூறப்படுகிறது.

டெல்லி காற்று  மாசு

கடந்த ஆண்டில் டெல்லியில் மொத்தம் 1.39 லட்சம் மரணங்கள் பதிவாகியுள்ளன. இதில் இதய நோய்கள் மற்றும் தொற்று நோய்களால் அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. சுவாச நோய்களால் மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பது பெரும் சவாலாக மாறியுள்ள நிலையில், காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!