வேளாண்மை துறையின் கீழ் 10ம் வகுப்பு தேர்ச்சியடைந்தவர்களுக்கு டிராக்டர் ஓட்ட பயிற்சி!

உங்களுக்குப் பயன்படவில்லை என்றாலும் உங்கள் பகுதியில் வசிக்கும் தெரிந்தவர்களிடம் இந்த தகவலைச் சொல்லுங்க. இதன் மூலம் யாரோ ஒருவருடைய வாழ்க்கைத் தரம் உயரலாம். ஒரு புதிய விஷயத்தைக் கற்றுக் கொள்வதன் மூலம் அவர்களின் வாழ்க்கை மேம்படலாம். தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் மதுரையில் டிராக்டர் ஓட்டும் பயிற்சியானது வழங்கப்பட்ட உள்ளது.
இந்த பயிற்சி 25 நபர்கள் வரை கலந்து கொள்ளலாம், 22 நாட்கள் பயிற்சியானது வழங்கப்பட உள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று வயது வரம்பு 18 முதல் 45 வயது வரை இருக்கக் வேண்டும்.மேலும்,
ஏதேனும் கூடுதல் தகவல் பெற வேண்டும் என்றால் 94436 77046 மற்றும் 99443 44066 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயனடையுங்கள் என மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத்சிங் காலோன் தெரிவித்துள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!