மத்திய அரசைக் கண்டித்து தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்!

 
மத்திய அரசைக் கண்டித்து தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்!
தூத்துக்குடியில் மத்திய அரசைக் கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. 

அரசு துறைகளில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு தொழிலாளர் முன்னேற்ற பேரவை மாவட்ட செயலாளர் சுசி.ரவீந்திரன் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு நிறைவேற்றி உள்ள 4 தொழிலாளர் விரோத சட்டத் தொகுப்புகளை கைவிட வேண்டும், அரசு துறைகளில் பணி செய்யும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு, நிரந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை வழங்கி நிரந்தரப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது