சொத்து வரி உயர்வுக்கு வியாபாரிகள் கடும் எதிர்ப்பு... திருச்செந்தூரில் கடைகள் அடைப்பு!

 
திருச்செந்தூரில் கடைகள் அடைப்பு
 

திருச்செந்தூர் நகராட்சியில் சொத்து வரி பல மடங்கு உயர்த்தப்பட்டதைக் கண்டித்து வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் நகராட்சியில் சொத்து வரி பல மடங்கு உயர்த்தப்பட்டதாக கூறி பொதுமக்கள், வியாபாரிகள் உள்பட பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் இன்று வியாபாரிகள் தங்களின் கடைகளை அடைத்து பேரணியாக சென்று நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட போவதாக தெரிவித்தனர்.

திருச்செந்தூரில் கடைகள் அடைப்பு

அதன்படி திருச்செந்தூர் காந்தி மார்க்கெட் வியாபாரி கள் சங்கம், அனைத்து வியாபாரிகள் சங்கம், இந்து வியாபாரிகள் சங்கம், சைவ வேளாளர் வியாபாரிகள் சங்கம் உள்ளிட்ட 29 அமைப்புகள் ஆதரவு தெரிவித்து நான்கு ரத வீதி, டி.பி. ரோடு, காந்தி மார்க்கெட், கோவில் வாசல் உள்ளிட்ட பகுதிகளில் கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

திருச்செந்தூரில் கடைகள் அடைப்பு

இதனால் திருச்செந்தூர் நகர் பகுதியில் சுமார் 1000 கடைகள் அடைக்கப்பட்டு கருப்பு கொடி கட்டப்பட்டுள்ளது. மேலும் இந்தப் போராட்டத்திற்கு அமலி நகர் ஆலந்தலை மீனவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் 50 சதவீத மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் ஆலந்தலைப் பகுதியில் 100 படகுகளும், அமளி நகர் பகுதியில் 80 படகுகளும் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது