வாகன ஓட்டிகளே இந்தப் பக்கம் போகாதீங்க... நாளை முதல் போக்குவரத்து மாற்றம்... !

 
போக்குவரத்து தடை

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் எந்நேரத்திலும் போக்குவரத்து நெரிசல் தான். இதனை கட்டுப்படுத்தும் வகையில் மாநகர் முழுவதும் மெட்ரோ ரயில்பாதைகள் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் காரணமாக பல பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது

போக்குவரத்து மாற்றம்

அதில்   "சென்னை மாநகராட்சியும், ரயில்வே துறையும் இணைந்து புளியந்தோப்பு டாக்டர் அம்பேத்கர் கல்லூரி சாலையில் மேம்பாலம் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  இதன் காரணமாக நாளை ஜனவரி 2, 2024ம் தேதி  செவ்வாய்க்கிழமை   முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.  இதன்படி, பெரம்பூா் மற்றும் வியாசா்பாடியிலிருந்து டாக்டா் அம்பேத்கா் கல்லூரி சாலை, கணேசபுரம் ரயில்வே சுரங்கப்பாதை வழியாக புரசைவாக்கம் வரும் வாகனங்கள் ஒருவழிப் பாதையில் செல்ல வேண்டும்.

போக்குவரத்து
புரசைவாக்கம், டோவெட்டனில் இருந்து பெரம்பூா், வியாசா்பாடி, மாதவரம் வழியாக டாக்டா் அம்பேத்கா் கல்லூரி சாலையில் கணேசபுரம் சுரங்கப்பாதை வழியாக வரும் வாகனங்கள் டாக்டா் அம்பேத்கா் கல்லூரி சாலை, ஸ்டீபன்சன் சாலை, பெரம்பூா் பிரதான சாலை தெற்கு, முரசொலி மாறன் மேம்பாலம், பெரம்பூா் ரயில் நிலையம் சந்திப்பு வழியாக செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த போக்குவரத்து மாற்றம் நாளை முதல் வரும் ஓராண்டுக்கு அதாவது பணிகள் நிறைவடையும் வரையில் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web