வாகன ஓட்டிகளே இந்தப் பக்கம் போகாதீங்க... நாளை மெரினா காமராஜர் சாலையில் போக்குவரத்து மாற்றம்!
காணும் பொங்கல் கொண்டாட்டத்தை முன்னிட்டு நாளை (சனிக்கிழமை) சென்னையில், குறிப்பாக காமராஜர் சாலையில் பெருந்திரளான மக்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் காலை 11 மணி முதல் பல முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றங்கள் அமல்படுத்தப்படுகின்றன. பாரிமுனை, போர் நினைவுச் சின்னம், உழைப்பாளர் சிலை, காந்தி சிலை, கண்ணகி சிலை உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்கள் மாற்றுப் பாதைகளில் இயக்கப்படும்.

காமராஜர் சாலை, பாரதி சாலை, பெல்ஸ் சாலை, வாலாஜா சாலை, சுவாமி சிவானந்தா சாலை உள்ளிட்ட பகுதிகளில் ஒருவழிப் பாதை மற்றும் திருப்பிவிடும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சில பகுதிகளில் சென்னை மாநகர பேருந்துகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கடற்கரை நோக்கி செல்லும் வாகனங்களுக்கு தனியான வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வாகனங்களை நிறுத்த போர்ஷோர் சாலை, சென்னை பல்கலைக்கழகம், எம்.ஆர்.டி.எஸ் சேப்பாக்கம், மாநில கல்லூரி, பொதுப்பணி துறை மைதானம் உள்ளிட்ட இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து காவல்துறையினர் வழங்கும் வழிகாட்டுதல்களை வாகன ஓட்டுநர்கள் பின்பற்ற வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
