போக்குவரத்து காவலர் கார் ஓட்டுனர் மீது சராமாரி தாக்குதல்... வைரல் வீடியோ!
தலைநகர் டெல்லியின் பஹர்கஞ்ச் பகுதியில் நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் வன்முறையாக மாறியது. இதில் போக்குவரத்து காவலர் ஒருவர் கார் ஓட்டுநரை கொடூரமாக தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
🚨 पहाड़गंज दिल्ली ट्रैफिक पुलिस कार के अंदर युवक की बेरहमी से पिटाई वीडियो वायरल
— Ramesh Tiwari (@rameshofficial0) December 15, 2025
देखे कैसे ट्रैफिक पुलिस कार ड्राइवर को पीट रही , जब कैमरा देखा तब छोड़ा मगर तब तक बहुत देर हो चुकी थी pic.twitter.com/4CElBizXV0
வைரல் வீடியோவில், ஆத்திரமடைந்த காவலர் ஓட்டுநரை காரிலிருந்து வெளியே இழுத்து தாக்குகிறார். முகத்தில் குத்துகிறார். தொடர்ந்து கன்னத்தில் பலமுறை அறைகிறார். பொதுமக்கள் முன்னிலையிலேயே இந்த அராஜகம் நடந்துள்ளது. இதைப் பார்த்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
சட்டத்தை அமல்படுத்த வேண்டியவரே இப்படி நடந்து கொண்டது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. தவறு இருந்தால் அபராதம் விதிக்கலாமே தவிர, தாக்க எந்த உரிமையும் இல்லை என நெட்டிசன்கள் கூறுகின்றனர். இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட காவலர் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என டெல்லி காவல்துறை உயரதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
