போக்குவரத்து போலீஸாருக்கு சட்டை பட்டனில் ‘பாடி வோன்’ கேமரா!

 
கேமரா
 

வாகன ஓட்டிகள், போக்குவரத்து போலீஸார் இடையே ஏற்படும் தகராறுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், நவீன ‘பாடி வோன் கேமரா’ விரைவில் அமலுக்கு வருகிறது. வாகன சோதனையில் ஈடுபடும் போலீஸாரின் சீருடை நெஞ்சுப் பகுதியில் இந்த கேமரா பொருத்தப்படும். இதன் மூலம் ஓட்டிகளுடன் நடைபெறும் உரையாடல்கள், விதிமீறல்கள் அனைத்தும் தெளிவாக பதிவு செய்யப்படும்.

மது போதையில் ஓட்டுதல், அதிவேகம், ஹெல்மெட் இல்லாமல் பயணம், ஒரே வாகனத்தில் அதிக பேர் செல்லுதல் உள்ளிட்ட விதிமீறல்கள் நேரடியாக பதிவாகும். கண்காணிப்பு கேமரா இல்லாத பகுதிகளிலும் இனி ஆதாரம் இருக்கும். யார் தவறு செய்தார் என்பது உடனடியாக தெரிய வரும்.

கேமரா

முன்னதாக பயன்படுத்தப்பட்ட கேமராவில் அதிக சூடு, குறைந்த சார்ஜ் போன்ற புகார்கள் எழுந்தன. இதை சரி செய்து மேம்படுத்தப்பட்ட புதிய கேமரா சோதனை முறையில் பயன்படுத்தப்படுகிறது. தற்போது தினமும் 5 போக்குவரத்து உதவி ஆய்வாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த கேமரா, விரைவில் அனைத்து போலீஸாருக்கும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!