கடும் போக்குவரத்து நெரிசல்… பேருந்து நிலையப் பணிகளை விரைந்து முடிக்க மக்கள் கோரிக்கை!

 
போக்குவரத்து நெரிசல்
 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பத்தலப்பள்ளி பகுதியில் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதே பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணிக்காக தேசிய நெடுஞ்சாலையோர சர்வீஸ் சாலை தோண்டப்பட்டு வருகிறது. இதனால் பெங்களூரில் இருந்து ஓசூர் வழியாக கிருஷ்ணகிரி செல்லும் வாகனங்கள் மெதுவாக செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அப்பகுதியில் பெரிய காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. மார்க்கெட்டிற்கு வரும் லாரிகள் மற்றும் வாகனங்கள் சர்வீஸ் சாலையை ஆக்கிரமிப்பதால் போக்குவரத்து மேலும் பாதிக்கப்படுகிறது. தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதி எதிர்புற போக்குவரத்துக்கு ஒதுக்கப்பட்டிருந்தாலும், அங்கும் வாகனங்கள் சீரற்ற முறையில் நிறுத்தப்படுவதால் நெரிசல் அதிகரித்துள்ளது.

இந்த போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் தினமும் சிரமம் அனுபவித்து வருகின்றனர். நீண்ட நேரம் காத்திருந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டுகின்றனர். பேருந்து நிலைய கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!