சோகம்!! 2 குழந்தைகளுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை!!

 
சூர்யா


திருவண்ணாமலை மாவட்டம் சோமாசி பாடியில் வட்ராபுத்தூர் கிராமத்தில் வசித்து வருபவர்  35 வயது சின்ராஜ். இவருடைய மனைவி  32 வயது சூர்யா. இவர்களுக்கு திருமணம் ஆகி 6 வருடங்கள் ஆகின்றன. இவர்களுக்கு 4 வயதில்  லக்சன், 1 வயதில் உதயன்  என 2 மகன்கள். இந்நிலையில் சின்ராஜ் கனலாபாடி ஊராட்சி செயலாளராகவும், சூர்யா சோமாசிபாடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராகவும் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த சில வாரங்களாகவே கணவன் , மனைவிக்கிடையில் குடும்பத் தகராறு காரணமாக அடிக்கடி கருத்து வேறுபாடுகள் காரணமாக தொடர் பிரச்சினைகள், வாக்குவாதங்கள், சர்ச்சைகள்  ஏற்பட்டு வந்துள்ளது.

கிணறு நீச்சல் மீட்பு

நேற்று மீண்டும் சின்ராஜ் சூர்யாவிற்கும் இடையே தகராறு  முற்றிவிட்டது.  இரவு சின்ராஜ் திண்டிவனத்தில் நடைபெற்ற  தனது நண்பர் திருமணத்தில் கலந்துகொண்டு இரவு 12 அணிக்கு பிறகு வீடு திரும்பினார். வீட்டின் கதவு திறந்தே இருந்ததை கண்டு சின்ராஜ் அதிர்ச்சி அடைந்தார். அவர் உடனடியாக உள்ளே சென்று பார்த்த பொழுது தனது மனைவி மற்றும் இரு மகன்களையும் காணவில்லை. அனைத்து இடங்களிலும் தேடினார். உறவினர்கள் , நண்பர்கள் வீடுகளில் விசாரித்தார்.  அதன் பிறகு அவர்களின் உதவியுடன் கிராமம் முழுக்க தேடி அலைந்த சின்ராஜ் கிணற்றின் அருகே  மொபைல் ஒலிப்பதை கண்டு  தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார். தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து கிணற்றில் குதித்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

கிணறு

2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு  சூர்யா மற்றும் 4  வயது மகனுடன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனர். இவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஒரு வயது குழந்தையின் உடலை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில்  இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து  சின்ராஜை காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் இரண்டு மகன்கள் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web