24 வயசில் சோகம்... கார் விபத்தில் முன்னாள் அமைச்சர் மகள் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!

 
விபத்து

மத்தியப் பிரதேசம் மாநிலம், இந்தூரில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் உள்துறை அமைச்சருமான பாலா பச்சன் அவர்களின் மகள் பிரேர்னா பச்சன் (24), சாலை விபத்தில் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

நேற்று இரவு இந்தூர் மாவட்டம் ராணாமண்டல் பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. பிரேர்னா மற்றும் அவரது நண்பர்கள் காரில் சென்றுகொண்டிருந்தபோது, அதிவேகமாக வந்த லாரி கார் மீது நேருக்கு நேர் மோதியுள்ளது. இந்த விபத்தில் கார் முற்றிலுமாக சிதைந்தது. இதில் பிரேர்னா பச்சன் மற்றும் அவரது நண்பர்கள் இருவர் என 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

பள்ளி மானவி தற்கொலை

காரில் இருந்த மற்றொரு இளம்பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் இந்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டுத் தப்பி ஓடிவிட்டார். போலீசார் லாரியைப் பறிமுதல் செய்து, தலைமறைவாக உள்ள ஓட்டுநரைத் தேடி வருகின்றனர். ஆரம்பகட்ட விசாரணையில், லாரி ஓட்டுநரின் கவனக்குறைவே விபத்திற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!