வருட கடைசியில் சோகம்... "ஊரோரம் புளியமரம்..." - பருத்திவீரன் படப் பாடகி லட்சுமி அம்மாள் காலமானார்!

 
பருத்திவீரன் லட்சுமி

தமிழ் சினிமாவில் யதார்த்தமான கிராமியக் குரலால் ரசிகர்களைக் கவர்ந்த மூத்த நாட்டுப்புறக் கலைஞர் லட்சுமி அம்மாள் (75), உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலை காலமானார்.

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த லட்சுமி அம்மாள், தென் மாவட்டங்களில் புகழ்பெற்ற கிராமியக் கலைஞராகத் திகழ்ந்தவர். மேடை நிகழ்ச்சிகளில் பல நூறு நாட்டுப்புறப் பாடல்களைப் பாடி வந்த இவரைத் திரைத்துறையில் அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் அமீர்.

2007-ம் ஆண்டு வெளியான 'பருத்திவீரன்' படத்தில், கார்த்தி மற்றும் சரவணன் ஆடும் "ஊரோரம் புளியமரம்..." என்ற பாடலைப் பாடியதன் மூலம் உலகத் தமிழர்கள் மத்தியில் பிரபலமானார். இப்பாடலில் இடம்பெற்ற இவரது தனித்துவமான குரல் வளம் மற்றும் கிராமிய மணம் வீசும் பாடும் விதம், அந்தப் பாடலை மிகப்பெரிய வெற்றியாக மாற்றியது.

கடந்த சில நாட்களாக வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அவரது மறைவுக்குப் பல நாட்டுப்புறக் கலைஞர்களும், திரைத்துறையினரும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

கிராமிய இசையின் ஒரு முக்கியமான குரல் இன்று மௌனமாகியுள்ளது, அவரது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!