பாரம்பரிய திருவிழாவில் சோகம்.. தீயில் கருகி 11 பேர் பலி; 3500 பேர் காயம்! அதிர்ச்சி வீடியோ!

 
தீ மிதிப்பு திருவிழா

பாரசீக புத்தாண்டை முன்னிட்டு, ஈரானின் பாரம்பரிய தீ மிதிப்பு திருவிழா நடைபெற்று வருகிறது. இத்திருவிழா, ஒவ்வொரு ஆண்டும் ஈரானிய நாட்காட்டி ஆண்டின் கடைசி செவ்வாய்க்கிழமை (மார்ச் 14) இரவு தொடங்கி, மார்ச் 20ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

இவ்விழாவின்போது அதில் பங்கேற்கும் நபர்கள், தங்கள் உடலில் இருக்கும் தீய சக்திகளை விரட்டி வலிமையான உடலைத் தரும்படி வேண்டிக் கொள்வதாகச் சொல்லப்படுகிறது. இதற்காக இவ்விழாவில் அவர்கள் தீயை தாண்டி குதிக்கின்றனர். 


மேலும் அந்த தீயில் தாண்டுவதற்கு முன்பு, நான் என் நோய் அறிகுறி உள்ள மஞ்சள் நிற உடலை உனக்கு தருகிறேன். அதற்குப் பிறகு வாழ்க்கையின் சின்னமான சிவப்பு நிறத்தை எடுத்துக்கொள்கிறேன், என கூறிக்கொண்டே தீ மீது தாண்டுகின்றனர். இப்படி ஒருவாரம் நடைபெறும் இந்த தீ திருவிழாவில் நேற்றைய தொடக்க நாளின்போதே 11 பேர் இறந்ததாகவும், 3,500க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தீ மிதிப்பு திருவிழா

இந்த திருவிழா, ஈரான் நாட்டில் பாரம்பரியமாக கொண்டாடப்பட்டாலும், ஷியைட் மதகுரு ஸ்தாபனத்தால் வெறுக்கப்படுகிறது எனவும் சொல்லப்படுகிறது. இந்த விழாவின்போது இளைஞர்கள் பலர் பட்டாசுகளைக் கொளுத்திப் போடுவதால்தான் மரணம் அல்லது தீக்காயம் சம்பவங்கள் ஏற்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web