தொடரும் சோகம்.. நடுகடலில் படகு கவிழ்ந்து 67 பேர் மாயம்!

 
அகதி

ஆப்பிரிக்க நாடுகளில் நிலவும் உள்நாட்டு போர் மற்றும் பொருளாதார நெருக்கடியால் ஏராளமானோர் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். கடல் வழியாகவும், சாலை வழியாகவும் செல்கின்றனர். ஆனால் பெரும்பாலும் கடல் மார்க்கமாக படகுகளில் செல்ல முற்படுகின்றனர். இதில் பல பயணங்கள் ஆபத்தில் முடிந்து விடுகின்றன. அப்போது உயிரிழப்புகளும் ஏற்படுவது பெரும் சோகத்தை ஏற்படுத்துகிறது.

அகதி

இந்த சோகம் ஏற்படும் போதும், நாளுக்கு நாள் அகதிகளாக வெளியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் வட ஆப்ரிக்க கண்டத்தில் உள்ள ஆப்பிரிக்க நாடான துனிசியாவில் இருந்து இத்தாலிக்கு புறப்பட்ட அகதிகள் படகு ஒன்று, துனிசியா கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பச்சிளம் குழந்தைகள் உள்பட 34 பேர் கடலில் மூழ்கி மாயமாகினர். 

அகதி

இது குறித்து தகவல் அறிந்துசென்ற துனிசியா கடற்படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். எனினும் இவர்கள் செல்வதற்குள் படகு கடலில் மூழ்கியது. அவர்களின் கதி என்ன என்பது தெரியவில்லை. துனிசியாவில் கடந்த 2 நாட்களில் மட்டும் 5 அகதிகள் படகுகள் கவிழ்ந்து விபத்தில் சிக்கியுள்ளது. இந்த விபத்துகளில் மொத்தம் 7 பேர் உயிரிழந்தனர். 67 பேர் மாயமாகி உள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web