ஆன்லைன் ரம்மியால் தொடரும் சோகம்.. பணத்தை இழந்ததால் இளைஞர் தற்கொலை!

 
ஆன்லைன் ரம்மி

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்தவர்கள் அடுத்தடுத்து தற்கொலைச் செய்து கொள்ளும் போக்கு தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிக்க இன்னும் விடிவு காலம் வரவில்லை. இந்நிலையில், மணப்பாறையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தற்கொலைச் செய்து கொண்டுள்ளார். திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த சவேரியார் புரத்தைச் சேர்ந்தவர் வில்சன் (வயது 26). இவர் அந்த பகுதியில் உள்ள டீக்கடை ஒன்றில் வடை, பஜ்ஜி மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பாக ஆன்லைன் ரம்மி விளையாடத் துவங்கியவர் அதன் பிறகு தொடர்ந்து விளையாட்டில் ஆர்வம் ஏற்பட விளையாடி வந்துள்ளார். இந்நிலையில், ஆன்லைன் விளையாட்டின் மூலமாக சுமார் 4 லட்சம் ரூபாய் வரையில் இழந்ததாக கூறப்படுகிறது. இதை அவரது தந்தை கண்டித்துள்ளார். இதனால் வையம்பட்டியில் குடும்பத்துடன் வில்சன் தனியாக குடியேறி விட்டார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கோவைக்கு வேலைக்குச் சென்றுள்ளார்.

மணப்பாறை மருத்துவமனை

கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு சவேரியார்புரம் வந்த வில்சன், நேற்று முன் தினம், தனது குழந்தைக்கு உடல் நிலை சரியில்லாததால் மனைவி மற்றும் குழந்தையை பேருந்தில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனையில் கொண்டு சென்று பின்னர் தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

ஆன்லைன் ரம்மி விளையாடிய போது ஏற்பட்ட கடனை அடைக்க முடியாததால் மிகுந்த மன வேதனைக்கு ஆளான அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இறந்த வில்சனுக்கு மெர்சிராணி என்ற மனைவியும் இரண்டரை வயதில் ஆண் குழந்தையும், ஒரு மாதமே ஆன பெண் குழந்தையும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ரம்மி வீடு

ஏற்கனவே மணப்பாறையில் ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்த வாலிபர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் மற்றொரு வாலிபரின் தற்கொலை சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டத்தில் ஆன்லைன் ரம்மியால் இது வரை நான்கு பேர் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

 

From around the web