பள்ளிகளில் தொடரும் சோகம்... நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் 10 ம் வகுப்பு மாணவர் பலி... 5 மாணவர்கள் கைது!

கேரளா மாநிலத்தில் கோழிக்கோட்டில் எலெட்டில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து வருபவர் 10 ம் வகுப்பு மாணவர் முகமது ஷஹாபாஸ்.இவர் குழு மோதலில் பரிதாபமாக உயிரிழந்தார். தாமரச்சேரியில் நடந்த இந்த சம்பவம் குறித்து ஐந்து மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அனைவரும் மைனர்கள் என்பதால், அவர்கள் சிறார் நீதி வாரியத்தின் முன் ஆஜராகும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 27ம் தேதி தாமரச்சேரியில் இரண்டு குழுக்களுக்கு இடையே நடந்த மோதலில் 10ம் வகுப்பு மாணவர் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்தார். இது குறித்து கேரள பொதுக் கல்வி அமைச்சர் வி. சிவன்குட்டி, பொதுக் கல்வி இயக்குநரிடம் அறிக்கை கேட்டுள்ளார் .
இந்த மோதலால் ஏற்பட்ட காயங்களுக்கு சிகிச்சை பெற்று வந்த 15 வயதான முகமது ஷஹாபாஸ், கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று அதிகாலையில் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இச்சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!