பயங்கர வெடிவிபத்து!! உடல் சிதைந்து தொழிலாளி பலி !! பட்டாசு ஆலைகளில் தொடரும் சோகம்!!

 
பட்டாசு

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகேயுள்ள அணைக்கரையில், பாலகிருஷ்ணன் என்பவர் உரிமம் பெற்று தனக்கு சொந்தமான  தோட்டத்தில் வானவெடி தயாரிக்கும் பட்டாசு தொழிற்சாலை நடத்தி வந்துள்ளார். அங்கு வானவெடி தயாரித்து வெளிமாவட்டங்கள், உள்ளூர் பகுதிகளுக்கு விற்பனை செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில், அவரது பட்டாசு தொழிற்சாலையில் உடன்குடியை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் வெடி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென அங்கிருந்த பட்டாசுகள் வெடித்து சிதறியது. இதனால் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த ராஜ்குமார் உடல் சிதைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பட்டாசு

மேலும் கட்டிடம் முழுவதும் இடிந்து தரைமட்டமானதால் வேலை பார்த்து கொண்டிருந்த தொழிலாளி பாலா என்பவரும் காயம் அடைந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் பாலாவை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

பட்டாசு

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராஜ்குமாரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்


 

From around the web