வெள்ளியங்கிரியில் தொடரும் சோகம்... மலையேறிய போது பக்தர் மயங்கி சரிந்து பலி!

 
 வெள்ளியங்கிரியில் தொடரும் சோகம்... மலையேறிய போது பக்தர் மயங்கி சரிந்து  பலி!

தமிழகத்தில் கோவையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி பூண்டி அடிவாரத்தில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் அமைந்துள்ளது.  இந்த கோவில் அடிவாரத்திலிருந்து   சுமார் 6000 அடி உயரத்தில் 7வது மலையில் சுயம்புலிங்க சுவாமி உள்ளது. 

கோவை வெள்ளியங்கிரி மலை

இந்த மலையில் உள்ள சுயம்புலிங்க சுவாமியை தரிசிக்க ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி முதல் மே மாதம் வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும்  பிப்ரவரி 1ம் தேதி முதல் பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதில் காஞ்சிபுரம் மாவட்டம் செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் 42 வயது ரமேஷ். இவர்  தனது நண்பர்கள் 5 பேருடன் வெள்ளியங்கிரி மலையேறுவதற்காக, காஞ்சிபுரத்தில் இருந்து கார் மூலம் புறப்பட்டு கோவில் அடிவாரம் வந்துள்ளார். 

குழந்தை  பலி
 தனது நண்பர்களுடன் மலையேறிய, ரமேஷ் சாமி தரிசனம் முடித்து விட்டு, நேற்று அதிகாலை 5.30 மணிக்கு கீழே 6வது மலையில் இறங்கிக் கொண்டிருந்தார். அப்போது, கடும் குளிர் காரணமாக திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனையடுத்து அவர் அதே இடத்தில் மயங்கி கீழே விழுந்து உயிரிழந்தார். இதைப்பார்த்ததும், அதிர்ச்சியான அவரது நண்பர்கள் உடனடியாக டோலி கட்டி அவரை மலை அடிவாரத்துக்கு தூக்கி வந்தனர். இதுகுறித்து,  போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதுன் பேரில்  விரைந்து வந்த போலீசார், ரமேசின் உடலை கைப்பற்றி, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?