தவறான வழித்தடத்தில் வந்த ரயில்.. தண்டவாளத்தில் பணியில் இருந்த 4 ஊழியர்கள் பலியான சோகம்!

 
பனிமூட்டம்

குளிர் காலத்தின் இறுதிக் கட்டத்தில் இருப்பதால் கடும் பனிமூட்டம் நிலவுகிறது. இதனால் பல இடங்களில் அதிகாலையில் சாலையில் வாகனங்கள் வருவதுகூட தெரியாத அளவுக்கு பனிமூட்டம் காணப்படுவதால் வாகன ஓட்டிகள் அவதியுறுகின்றனர். மகாராஷ்டிராவில் பனிமூட்டம் காரணமாக நான்கு ரயில்வே பணியாளர்கள் உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.

நாசிக் அருகில் இருக்கும் லாசல்காவ்- உகாவ் பகுதிகளுக்கு இடையே இன்று காலையில் ரயில்வே ஊழியர்கள் பராமரிப்புப் பணிகளில் ஈடுபட்டு வந்தனர். அதிகாலை நேரம் என்பதால் பனிமூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் அருகில் இருப்பவர்கள் கூட கண்ணுக்குத் தெரியாமல் இருந்தது. 

train

அப்போது ரயில்வே மின்சார பராமரிப்பு வாகனம் தண்டவாளத்தில் வந்தது. அந்த வாகனம் வருவதை கவனிக்காத ஊழியர்கள் தொடர்ந்து வேலை செய்து கொண்டிருந்தனர். மேலும் வாகனம் வருவதற்கான சத்தம் எதுவும் அவர்களுக்கு கேட்கவில்லை. இதனால் அந்த வாகனம் பணியில் இருந்த நான்கு பேர் மீதும் மோதியது. இதில் 4 ஊழியர்கள் பலத்த காயமடைந்தனர். 

இதனை அறிந்த சக ஊழியர்கள், காயமடைந்த 4 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். எனினும் அங்கு 4 பேரும் உயிரிழந்தனர். ரயில்வே பராமரிப்பு வாகனம் தவறான வழித் தடத்தில் வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ரயில்வே வாகனத்தை ஓட்டிய ஊழியரை பிடித்து அடித்து உதைத்தனர்.

train

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து பணியில் கவனக் குறைவாக இருந்த ரயில்வே வாகன சூப்பர்வைசர், பொறுப்பாளர் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web