இரும்புத் தடியால் தலை, கண்களில் தாக்கி கொத்தனார் படுகொலை... கள்ளக்காதலியை மிரட்டியதால் விபரீதம்.. !

 
மிரட்டல்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் காமராஜ் நகர் பகுதியில் வசித்து வருபவர்  கணேசன் . இவருடைய மகன்  ஆறுமுகம் .  இவர் கொத்தனாராக பணிபுரிந்து வருகிறார்.  இவருக்கு இன்னும் திருமணமாகாத நிலையில் இவருக்கும், விளாத்திகுளத்தை   சேர்ந்த திருமணமான பெண்ணுக்கும்    தகாத உறவு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. அந்த  பெண் சமீப காலமாக  அதே பகுதியில் வசித்து வரும்   ஓட்டுநர் செந்தில்குமாருடனும் தொடர்பில் இருந்ததாக  கூறப்படுகிறது.   ஆறுமுகம் அந்தப் பெண்ணை செந்தில்குமாரிடம் பேசக்கூடாது என கூறியுள்ளார்.

அடித்தே கொலை

அத்துடன் நில்லாமல் டிசம்பர் 30ம் தேதி   விளாத்திகுளம் பஜாரில் அப்பெண்ணுடன்  ஆறுமுகம் சண்டை போட்டுள்ளார்.  செந்தில்குமாரிடம், ஆறுமுகம் தன்னை தொந்தரவு செய்வதாக கூறினார்.  இதன் பேரில்  செந்தில்குமார், ஆறுமுகத்தை போனில் மிரட்டியுள்ளார். இதில்  இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதில் தகராறு முற்றியது.   கட்டிடத் தொழிலாளியான ஆறுமுகத்தை கொலை செய்ய முடிவு செய்தார். இதனால்  செந்தில்குமார் , சனிக்கிழமை காலை முதலே ஆறுமுகத்தை  பின்தொடர்ந்து வந்தார்.  ஆறுமுகம் சனிக்கிழமை  இரவு 9.15 மணி அளவில் மது குடிப்பதற்காக மேட்டுப்பட்டியில்   டாஸ்மாக் கடைக்கு மதுகுடிக்க  நண்பர்களுடன்  சென்றுள்ளார்.


ஆறுமுகம் தன்னை கொலை செய்ய சுற்றி சுற்றி வருவதை அறிந்து கொண்டார்  செந்தில்குமார்.  தன்னுடன் ஓட்டுநர்களாக பணிபுரிந்து வரும்  சகோதரர் செல்வகுமார்   மற்றும் அவரது நண்பர்களான விளாத்திகுளம்   முத்துமாரியப்பன் , ஜெயக்குமார்   4 பேரும் TATA ACE வாகனம் மற்றும் பைக்கில் அங்கு சென்று   மது அருந்திக்கொண்டிருந்த கொத்தனார் ஆறுமுகத்தை, செந்தில்குமாரை  தலையில்  இரும்பு கம்பியால் அடித்து  அருகில் உள்ள விவசாய நிலத்திற்கு தரதரவென இழுத்துச்சென்று தலை மற்றும் கண் பகுதியில் கத்தியால் குத்தினர்.  

ஆம்புலன்ஸ்

 ஆறுமுகத்தை காப்பாற்ற வந்த அவருடைய  நண்பர்களையும் கத்தியை காட்டி கிட்ட வந்தால் குத்தி விடுவேன் என மிரட்டல் விடுத்தனர்.  இரத்த வெள்ளத்தில் ஆறுமுகம் சரிந்து விழுந்ததும்  இவர்கள் இரு சக்கர வாகனங்களில் தப்பி சென்று விட்டனர்.   இச்சம்பவம் குறித்து   போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும்  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த  போலீசார்  ஆறுமுகத்தின் உடலை பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குற்றவாளிகளைத் தீவிரமாக தேடி வந்த நிலையில், தற்போது கொலை செய்த செல்வகுமார், முத்து மாரியப்பன் மற்றும் ஜெயக்குமார்  3 பேரும் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அத்துடன் கொலை செய்து விட்டு தப்பி ஓடி  தலைமறைவாகி இருக்கும்  செந்தில்குமாரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web