பொங்கல் விடுமுறையில் சோகம்... கடலில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 2 பேர் உயிரிழப்பு - ஒருவரது உடல் மீட்பு!
சென்னை கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் நான்கு பேர், இன்று பொங்கல் விடுமுறையைக் கழிக்க மாமல்லபுரம் அருகே உள்ள சூளேரிக்காடு கடற்கரைக்குச் சென்றுள்ளனர். அங்கு நேரிட்ட கடல் சீற்றத்தில் சிக்கி இருவர் பலியாகினர்.
சென்னையைச் சேர்ந்த ஜெகன் (18), அருண் (18), ராகுல் (18) மற்றும் கிருஷ்ணா (17) ஆகிய நான்கு நண்பர்கள் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் கிழக்கு கடற்கரை சாலை வழியாகச் சுற்றுலா சென்றுள்ளனர். சூளேரிக்காடு கடற்கரையில் நான்கு பேரும் கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக எழுந்த ராட்சத அலை ஜெகன் மற்றும் அருண் ஆகிய இருவரையும் கடலுக்குள் இழுத்துச் சென்றது.

நண்பர்களின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த மீனவர்கள் அவர்களைக் காப்பாற்ற முயன்றனர். ஆனால் கடல் சீற்றம் அதிகமாக இருந்ததால் அவர்களால் இருவரையும் மீட்க முடியவில்லை.

சுமார் ஒரு மணி நேரத் தேடலுக்குப் பிறகு, கிண்டி அரசு பாலிடெக்னிக் மாணவர் ஜெகனின் உடல் மட்டும் கரை ஒதுங்கியது. அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காகச் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கடலில் காணாமல் போன பி.சி.ஏ முதலாம் ஆண்டு மாணவர் அருணின் உடலை, மாமல்லபுரம் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் மீனவர்கள் உதவியுடன் படகுகள் மூலம் தேடி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
