பெருந்துயரம்... உத்தரகண்ட் சாமோலியில் கடும் பனிச்சரிவு... 57 தொழிலாளர்கள் கதி என்ன?! மீட்புப் பணிகள் தீவிரம்!
தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF), மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF), மாவட்ட நிர்வாகம், இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படை (ITBP) மற்றும் எல்லைச் சாலைகள் அமைப்பு (BRO) குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன.

துரதிஷ்டவசமாக இன்று நள்ளிரவு வரை உத்தரகண்டில் மிக கனமழை (20 செ.மீ வரை) பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. உத்தரகண்ட் மாநிலம் சாமோலியில் உள்ள மனா கிராமத்தில் இன்று ஏற்பட்ட கடும் பனிச்சரிவில் 57 தொழிலாளர்கள் புதைந்துள்ளதாக அஞ்சப்படும் நிலையில் அந்த பகுதியில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன .

உத்தரகண்ட் பகுதியில் வானிலை நிலவரங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் திவாரி கூறுகையில், "வானிலை ஆய்வுத் துறையின் கூற்றுப்படி, எங்களுக்குக் கிடைத்த ஆரஞ்சு எச்சரிக்கை மாவட்டத்தில் கனமழை மற்றும் பனிப்பொழிவு ஏற்படுவதைக் குறிக்கிறது. பத்ரிநாத் தாம், ஹனுமன்சட்டி, மலாரி பகுதி மற்றும் அவுலி போன்ற உயரமான பகுதிகளில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டு வருகிறது, அதே நேரத்தில் மற்ற தாலுகாக்களில் தொடர் மழை பெய்து வருகிறது" என்றார்.
பனிச்சரிவில் 57 தொழிலாளர்கள் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படும் நிலையில், மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
