பெங்களூருவில் சோகம்... கள்ளக்காதலியைக் கொன்று இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை!

 
கள்ளக்காதல்

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாகக் கள்ளக்காதலியின் கழுத்தை இறுக்கிக் கொலை செய்த இளைஞர், பின்னர் தானும் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு ராஜகோபால்நகர் பகுதியைச் சேர்ந்த லட்சுமி நாராயணா (51), தனியார் நிறுவன ஊழியர். மனைவியைப் பிரிந்து வசித்து வந்த இவருக்கும், அதே பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்த லலிதா (49) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. லலிதாவும் தனது கணவரைப் பிரிந்து தனியாக வசித்து வந்தார்.

பலாத்காரம் காதல் கள்ளக்காதல்

இந்த இருவரின் பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் திருமணம் செய்துகொள்ளாமல், கடந்த 10 ஆண்டுகளாக இந்திரா பிரியதர்ஷினி நகரில் உள்ள ஒரு வாடகை வீட்டில் கணவன்-மனைவி போல வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், லலிதாவின் நடத்தையில் லட்சுமி நாராயணாவுக்குச் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு வந்தன.

நேற்று முன்தினமும் இந்த விவகாரத்தில் இருவருக்கும் இடையே தகராறு முற்றியது. ஆத்திரம் அடைந்த லட்சுமி நாராயணா, வீட்டில் இருந்த சேலையால் லலிதாவின் கழுத்தை இறுக்கினார். இதில் மூச்சுத்திணறிய லலிதா பரிதாபமாக உயிரிழந்தார். காதலியைக் கொன்ற அதிர்ச்சியில், லட்சுமி நாராயணா அதே சேலையால் மின்விசிறியில் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

கள்ளக்காதல்

நேற்று காலை வீடு திறந்து கிடந்ததால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டிற்குச் சென்று பார்த்தபோது, லலிதா தரையிலும், லட்சுமி நாராயணா தூக்கில் தொங்கிய நிலையிலும் சடலமாகக் கிடந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ராஜகோபால்நகர் போலீசார், இருவரின் உடல்களையும் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து ராஜகோபால்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!