திரையுலகில் சோகம்... பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி சேகரன் காலமானார் !

 
தயாரிப்பாளர் கலைப்புலி சேகரன்

தமிழ் திரையுலகில் பிரபல மற்றும் முண்ணனி தயாரிப்பாளர்களில் ஒருவராக அறியப்படுபவர் கலைப்புலி ஜி.சேகரன். இவர் காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவருக்கு வயது 73. கலைப்புலி தாணு விநியோகஸ்தர், தயாரிப்பாளர், நடிகர், இயக்குநர், தொழிற்சங்கவாதி என பல தளங்களில் இயங்கி வருகிறார். 

தயாரிப்பாளர் கலைப்புலி சேகரன்

சினிமா விநியோகஸ்தராக தனது கரியரை தொடங்கியவர் ஜி.சேகரன். பின்னர் எஸ். தாணுவுடன் இணைந்து கலைப்புலி பிலிம்சின் பங்குதாரராகவும் ஆனார். 1985ம் ஆண்டு வெளியான ‘யார்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.

1988-ம் ஆண்டு ‘ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன்’ படத்தை இயக்கினார். ‘காவல் பூனைகள்’, ‘உளவாளி’ என அடுத்தடுத்து இயக்கத்தில் கவனம் செலுத்தினார். விநியோஸ்தர்கள் சங்க தலைவராக இருந்தார்.

தயாரிப்பாளர் கலைப்புலி சேகரன்

நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்ட கலைப்புலி ஜி. சேகரன் இன்று உடல்நிலை பாதிப்பால் உயிரிழந்தார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை ராயபுரத்தில் வைக்கப்பட்டுள்ளது. கலைப்புலி ஜி.சேகரன் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web