திரையுலகில் அடுத்தடுத்து சோகம்... பிரபல நடிகர் விஷ்ணு பிரசாத் காலமானார்!

 
விஷ்ணு பிரசாத் விஷ்ணு பிரசாத்


பிரபல மலையாள நடிகர் விஷ்ணு பிரசாத். அவர் இன்று அதிகாலை திடீர் உடல் நலக்குறைபாடு காரணமாக காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்தகவல்  மலையாளத் திரை உலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சிறப்பான நடிப்பாற்றலும், பண்புமிக்க நடத்தையும் கொண்ட மனிதரான விஷ்ணு பிரசாத், கடந்த சில வாரங்களாக கல்லீரல் குறித்த  உடல்நலப் பிரச்சனை காரணமாக சிகிச்சை பெற்று வந்திருந்தார். 


கொச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக ஐ.சி.யூவில் அனுமதிக்கப்பட்டிருந்த விஷ்ணு பிரசாத், இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார் என்ற செய்தி சமூக வலைதளங்களில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து மருத்துவ வட்டாரங்கள்  , “கல்லீரல் செயலிழப்பு காரணமாக பல்வேறு உடல் உறுப்புகள் செயலிழந்தன. சிறப்பான சிகிச்சைகள் அளிக்கப்பட்டும், அவரது நிலை கட்டுப்பாட்டிற்கு வரவில்லை,” என குறிப்பிடுகின்றனர். மலையாள சினிமாவில் துணை வேடங்களில் மிகச்சிறந்த இடத்தை பிடித்தவர் விஷ்ணு பிரசாத். வெகு குறுகிய காலத்திலேயே தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தவர்.

விஷ்ணு பிரசாத்
குறும்படங்கள், வெப் சீரிஸ்கள், பின்னணிப் பாத்திரங்கள் என பன்முகத் திறமையுடன்  விளங்கினார். அந்தவகையில் விஷ்ணு பிரசாத் உயிரிழந்த  செய்தி, மலையாளத் திரை உலகத்தை ஏக்கத்தில் மூழ்க வைத்துள்ளது. பல முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள், சின்னத்திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து  வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?