அதிர்ச்சி!! 16 வயது சிறுவன் மாரடைப்பால் மரணம்!! பிறந்தநாளில் சோகம்!!

 
சிறுவன்

மிக சின்னஞ்சிறுவயதில் மாரடைப்புக்கள் சகஜமாகி வருகின்றன. உடல் உழைப்பு என்பதே தொலைந்து விட்ட இக்காலத்தில் உடற்பயிற்சி செய்யும் போதும், விளையாடிக் கொண்டிருக்கும் போது உயிரிழப்புக்கள் தொடர்வது பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. முன்பெல்லாம் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே மாரடைப்புக்கள், கார்டியாக் அரெஸ்ட் இவையெல்லாம் வந்து திடீரென உயிரிழப்புக்கள் ஏற்படும்.

கொரோனா காலகட்டத்திற்கு பிறகு 30 வயது தொடங்கி தற்போது விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகள் வரை அனைவருக்கும் மாரடைப்புக்கள் வருகின்றன. அந்த வகையில் 16 வயது சிறுவன் பிறந்தநாளில் கேக் வெட்டும் போது மயங்கி சரிந்து விழுந்து உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகம் அனைத்து வகைகளிலும் வளர்ச்சி அடைந்து வரும் அதேவேளையில், மனிதனின் உடல்நிலையில் மாற்றம் ஏற்படுத்த முடியுமா என்ன?. என்னதான் தொழில்நுட்பம் வந்துவிட்டாலும் நமது உடல் ஆரோக்கியத்தை நாம்தான் பாதுகாக்க வேண்டும். இப்போது பணம் பின்னால் ஓடுவது, வேலை, செல்போன் கேம் என மூழ்கி கிடப்பதால் உடல்நல பாதிப்பு ஏற்படுகிறது.

அதேநேரம் மன அழுத்தம் போன்றவைகளும் சேர்ந்து கொள்வதால் வயது வித்தியாசம் இன்றி மாரடைப்பு ஏற்படுகிறது. உடல் ரீதியாக எந்தவொரு நடவடிக்கையும் இல்லாததால் மாரடைப்பு கணிசமாக அதிகரித்துள்ளது. முன்பு வயதானவர்கள், இணை நோய் உள்ளவர்கள் மட்டுமே ஏற்பட்ட மாரடைப்பு என்பது இப்போது இளைஞர்கள் மத்தியிலும் அதிகம் ஏற்படத் தொடங்கியுள்ளது. 

சிறுவன்

நல்ல ஆரோக்கியமாக இருக்கும் இளைஞர்களும் திடீரென உயிரிழக்கும் சம்பவங்களும் அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது. இதனை நாம் கண்கூடாக பார்க்கிறோம். கொரோனா பரவலுக்குப் பின்னரே இதுபோல திடீர் திடீரென ஏற்படும் மாரடைப்பு அதிகரிப்பதாகச் சொல்லப்படுகிறது.

இதற்கிடையே தெலங்கானா ஆசிபாபாத் மாவட்டத்தில் 16 வயதே ஆன சிறுவன் மாரடைப்பால் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் அந்த சிறுவன் தனது பிறந்த நாள் அன்றே உயிரிழந்தது பெரிய சோகம்.

கடந்த வெள்ளிக்கிழமை 16 வயதான சி.எச்.சச்சின் தனது பிறந்த நாளை கொண்டாட ரெடியானார். பாபாபூர் கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பிறந்த நாளை கொண்டாட நண்பர்கள், குடும்பத்தினர் உள்ளிட்டோர் கூடியிருந்தனர். சச்சின் பிறந்த நாளை பிரமாண்டமான கொண்டாடத் திட்டமிட்டு அவரது குடும்பத்தினர் பெரிய கேக் வாங்கியிருந்தனர். 

சிறுவன்

அப்போது சச்சின் எதிர்பாராத விதமாக திடீரென மயங்கி விழுந்தார். இதைப் பார்த்துக் கதறிய அவரது குடும்பத்தினரும் நண்பர்களும் அவரை உடனடியாக அருகே இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இருப்பினும், அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

சச்சின் உயிரிழப்பிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அவரது குடும்பத்தினர் கேக்கை வெட்டி உடல் அருகே வைத்து அஞ்சலி செலுத்தினர். 16 வயதே ஆன சிறுவன் அதுவும் பிறந்த நாள் அன்று உயிரிழந்தது அனைவருக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web