விடுமுறை நாளில் சோகம்... கடலில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழப்பு!
தூத்துக்குடி மாவட்டத்தில், நேற்று பள்ளி விடுமுறையை உற்சாகமாகக் கொண்டாடச் சென்ற மாணவர்கள், சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி தாளமுத்து நகர், கீதாஜீவன் நகரைச் சேர்ந்த திருமணி (14), முகேந்திரன் (12) மற்றும் நரேன் கார்த்திக் (13). இவர்கள் முறையே 9, 7 மற்றும் 8-ம் வகுப்பு பயின்று வந்தனர். வார இறுதி நாட்கள் மற்றும் நேற்று ஜனவரி 26 குடியரசு தினத்தை முன்னிட்டு பள்ளிகளுக்கு தொடர்ந்து 3 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதனால் நண்பர்களான 3 சிறுவர்களும் விளையாடுவதற்காக மொட்டை கோபுரம் கடற்கரைப் பகுதிக்குச் சென்றுள்ளனர்.

சிறுவர்கள் கடலில் குளித்துக் கொண்டிருந்த போது, திடீரென எழுந்த ராட்சத அலையில் சிக்கி மூவரும் ஆழ்கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர். நீண்ட நேர தேடுதலுக்குப் பிறகு மூவரும் சடலமாக மீட்கப்பட்டனர். இது குறித்த தகவலறிந்து வந்த தாளமுத்து நகர் போலீசார், சிறுவர்களின் உடல்களைக் கைப்பற்றித் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
