திருமண நாளில் சோகம்... லாரி மீது கார் மோதி ஒருவர் பலி, 3 பெண்கள் உட்பட 11 பேர் படுகாயம்!

சென்னை கே.கே.நகரில் வசித்து வருபவர் 45 வயது தாமஸ். இவரது மனைவி 40 வயது ஜெசிந்தா ராணி . வர்கள் இருவருக்கும் திருமணநாள் என்பதால் காரில் வேளாங்கண்ணி ஆலயத்துக்கு சென்றிருந்தனர். பின்னர் அங்கிருந்து மீண்டும் சென்னைக்கு புறப்பட்டு சென்றனர். இன்று இரவு கடலூர் அருகே நாகப்பட்டினம்- விழுப்புரம் 4 வழிச்சாலையில் காரைக்காடு பகுதியில் வந்தபோது முன்னே சென்ற வேனை அவர்கள் முந்தி செல்ல முயற்சித்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக அவர்கள் சென்ற கார் எதிரே கடலூரில் இருந்து ஜல்லி கற்களை ஏற்றிக்கொண்டு வந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. மேலும் அந்த கார் முன்னே சென்ற வேன் மீதும் மோதியதில் வேன் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 3 வாகனங்களும் பலத்த சேதமடைந்தன. காரில் வந்த தாமஸ், ஜெசிந்தாராணி மற்றும் வேனில் வந்த ஒரு பெண் உள்பட 11 பேர் படுகாயம் அடைந்தனர்.
இது குறித்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தாமஸ் பரிதாபமாக உயிரிழந்தார். 10 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விழுப்புரம் முதல் நாகப்பட்டினம் வரை அமைக்கப்பட்டிருக்கும் 4 வழிச்சாலையில் 2 இடங்களில் தற்போது டோல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
ஆனால் பல்வேறு இடங்களிலும் இந்தச் சாலைகள் ஒருவழிச் சாலையாக மாற்றப்பட்டு வாகனங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. ஆனால் எதிர் திசையில் வாகனம் வரும் என்பது குறித்த எந்தவிதமான அறிவிப்பு பலகையும் வைக்கப்படவில்லை. இதனால் தான் இந்த விபத்து நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த விபத்துக்கு அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். திருமண நாளில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!