ஃப்ரீ வெட்டிங் சூட்டில் பெரும் சோகம்... மோட்டார் சைக்கிள் மோதி மணமக்கள் பலி!
கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயது கரியப்பா மடிவாளா மற்றும் 19 வயது கவிதா, கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பெற்றோரால் முடிவு செய்யப்பட்ட கூட்டுத் திருமணத்துக்கான தயாரிப்பில் இருந்தனர். வருகிற 20-ந் தேதி இருவரின் குடும்பங்களின் கூட்டுத் திருமணம் நடைபெற இருந்தது. இதற்கு முன்னதாக, ‘போட்டோ சூட்’ செய்ய இருவரும் முடிவு செய்தனர்; குடும்பத்தினரும் அதற்கு சம்மதித்தனர்.

முந்தைய நாட்களில் பல்லாரி மாவட்டம் ஒசப்பேட்டே, உம்னாபாத் பகுதிகளில் மோட்டார் சைக்கிளில் போஸ் கொடுத்து போட்டோ எடுத்தனர். அதன்பிறகு, கங்காவதி அருகே சிக்கபெனகல் கிராமம் வழியாக வருகை தரும் போது, நடுரோட்டில் நின்றிருந்த லாரியுடன் மோட்டார் சைக்கிள் மோதியது. மோட்டார் சைக்கிளில் இருந்து இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் கவிதா சம்பவ இடத்திலேயே பலியானார்; கரியப்பா ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

சம்பவத்தை அறிந்த குடும்பத்தினர் கதறி அழுதனர். கங்காவதி புறநகர் போலீசார் உடனடியாக சம்பவ இடத்தை சென்றடைந்து, இருவரின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். லாரி டிரைவரைத் தேடும் முயற்சிகள் நடப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மணமக்கள் எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி, அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
