ஓடும் ரயிலில் ஏற முயன்ற போது சோகம்.. அரசு பள்ளி ஆசிரியர் பலியான பரிதாபம்!

 
அண்ணாமலை

சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த அண்ணாமலை (52) என்பவர் திண்டிவனம் அருகே உள்ள கொடியாம்புதூர் அரசு ஆரம்பப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவர் தினசரி காலை சென்னை எழும்பூரில் இருந்து பாண்டிச்சேரி வரை செல்லும் பயணி ரயிலில் செல்வது வழக்கம். அந்த ரயிலில் காலையில் பள்ளிக்கு சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்புவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

அண்ணாமலை

அந்த வகையில், வழக்கம் போல் நேற்றும் ரயிலில் செல்லும்போது வீட்டில் எடுத்துச் செல்லும் உணவை சாப்பிட்டு மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில்  பாத்திரத்தை கழுவதற்காக ரயிலில் இருந்து இறங்கியுள்ளார். அங்கு பாத்திரத்தை கழுவி முடிக்கவும் ரயிலும் புறப்பட்டுவிட்டது. இதனால் அவர் அவசர அவசரமாக மீண்டும் ரயிலில் ஏற முயன்றுள்ளார். அப்போது புறப்பட்டு நகர்ந்ததால் ஆசிரியர் அண்ணாமலை ஓடிச்சென்று ஓடும் ரயிலில் ஏற முயற்சித்துள்ளார்.

அண்ணாமலை

அப்போது கால் தவறி கீழே விழுந்த அவர், எதிர்பாராத விதமாக ரயிலில் சிக்கிக் கொண்டார். இதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சம்பவ இடத்திற்கு சென்ற ரயில்வே போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web