15 நாட்களில் வருவதாக சொன்ன இந்தியர் துருக்கி நிலநடுக்கத்தில் பலி! இறப்பதற்கு முன் மகனுடன் பேசி உருக்கம்!

 
விஜய் குமார்

துருக்கியில் கடந்த 6ம் தேதி அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் ஏராளமான கட்டங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின. தற்போது வரை மீட்புபணிகள் நடைபெற்று வரும் நிலையில், இன்றைய நிலவரப்படி பலி எண்ணிக்கை 28 ஆயிரத்தை கடந்துள்ளது. இன்னும் ஏராளமானவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்கலாம் என கூறப்படுவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந்நிலையில், துருக்கியில் இருந்த இந்தியர் ஒருவர் மாயமானதாக அறிவிக்கப்பட்டது. அவரை தேடி வந்த நிலையில் நேற்று அவரது உடல் மீட்கப்பட்டது. விசாரணையில் அவர் உத்தர காண்ட் மாநிலம் பாரிகார்வால் பகுதியை சேர்ந்த விஜய்குமார் காட் என்பதும், பெங்களூருவைச் சேர்ந்த ஆக்ஸி பிளாண்ட் இந்தியா எனும் நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில் வேலை நிமித்தமான துருக்கி சென்றதும் தெரியவந்தது.

விஜய் குமார்

அங்குள்ள 4 ஸ்டார் நட்சத்திர ஓட்டலில் அவர் தங்கிய நிலையில் நிலநடுக்கம் ஏற்பட்டு இடிபாடுகளுக்குள் சிக்கி இறந்துள்ளார். இவரது மரணத்தை துருக்கியில் இந்திய தூதரகம் உறுதி செய்துள்ளது. விஜய்குமாரின் இடது கையில் இருந்த டாட்டூ மூலம் குடும்பத்தினர் அடையாளம் கண்டு உறுதி செய்துள்ளனர். 

இந்நிலையில் தான் விஜய்குமார் பற்றி அவரது அண்ணன் அருண் குமார் காட் உருக்கமான தகவல்களை தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், நானும் எனது தம்பியும் பெங்களூரில் ஒன்றாக வேலை செய்தோம். நிறுவனத்தில் இருந்து துருக்கி சென்றான். பிப்ரவரி 20ம் தேதி அவன் துருக்கியில் இருந்து திரும்புவதாக இருந்தது. இந்நிலையில் தான் தற்போது நிலநடுக்கத்துக்கு பலியாகி உள்ளான்.

விஜய் குமார்

நிலநடுக்கத்துக்கு முந்தைய நாளான பிப்ரவரி 5ம் தேதி அவனது மனைவி, 6 வயது மகன் ஆகியோர் போனில் பேசினான். அப்போது இன்னும் 15 நாளில் வீட்டுக்கு வருவதாக கூறியுள்ளான். இந்நிலையில் தான் புதன்கிழமை அவன் மாயமாகி உள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்தது. தற்போது அவன் இறந்து விட்டான், என்று கண்ணீருடன் கூறினார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

 

From around the web