அபுதாபியில் கோர விபத்து: கேரள குடும்பத்தில் 4 குழந்தைகள் உயிரிழப்பு!
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த அப்துல் லத்தீப், துபாயில் பணியாற்றி வருகிறார். மனைவி ருக்சானா மற்றும் 5 குழந்தைகளுடன் துபாயில் வசித்து வந்த அவர், ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறையைக் கழிப்பதற்காக குடும்பத்துடன் அபுதாபிக்கு சென்றுள்ளார். அங்கிருந்து திரும்பும் போது அவர்கள் பயணித்த கார் திடீரென பயங்கர விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் அப்துலின் ஆண் குழந்தைகள் அஷாஸ் (14), அம்மார் (12), அஸாம் (7), அயாஷ் (5) ஆகிய நால்வரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களுடன் காரில் பயணம் செய்த வீட்டு பணியாளர் புஷ்ரா (49) என்பவரும் பலியானார். விபத்து நடந்த இடமே மரண ஓசையால் அதிர்ந்தது.
அப்துல், அவரது மனைவி ருக்சானா மற்றும் அவர்களது பெண் குழந்தை ஆகிய மூவரும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஒரே குடும்பத்தில் நால்வர் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் கேரளா முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
