2 ரயில்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து... 3 பேர் பலி.. 28 பேர் படுகாயம்... !

 
rail accident

இந்தோனேசியாவில் சமீபகாலமாக போக்குவரத்து விபத்துகள்  அதிகரித்து வருவதாக சர்வதேச அளவில் தொடர் குற்றச்சாட்டு நிலவி வருகிறது.  அந்நாட்டில் பேருந்துகள், ரயில்கள், விமானங்கள்  சேவை மிக மோசமாக உள்ளதாகவும் பராமரிப்பு பணிகள் சரியாக மேற்கொள்ளப்படுவதில்லை என்ற பொதுவான குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


அந்த வகையில் இன்று காலை இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.  இந்தோனேசியாவில்  மேற்கு ஜாவா மாகாணத்தில் சிக்கலெங்காவில்  இன்று காலை 6 மணிக்கு இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த கோர விபத்தில் பல பெட்டிகள் கவிழ்ந்தன. இந்த விபத்து குறித்து ரயில்வே செய்தித் தொடர்பாளர்  “ கிழக்கு ஜாவாவில் உள்ள சுரபாயாவிலிருந்து, பண்டுங் நகரத்துக்கு துரங்கா ரயில் சென்று கொண்டிருந்தது.

rail accident

இந்த ரயில் , உள்ளூர் பயணிகள் ரயிலுடன் நேருக்கு நேர் மோதியது.  துரங்கா ரயிலில் 287 பயணிகளும், உள்ளூர் பயணிகள் ரயிலில் 191 பேரும் பயணம் செய்தனர். இந்த விபத்தில் 3 பேர் பலியாகியுள்ளனர்.  படுகாயம் அடைந்த 28 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தடம் புரண்ட ரயில் பெட்டிகளில் சிக்கிய பயணிகள் அனைவரும் மீட்கப்பட்டு விட்டனர் "எனத் தெரிவித்துள்ளார்.  

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web