ரயில் தடம் புரண்டு கோர விபத்து… 21 பேர் பலி!

 
ரயில்

ஸ்பெயினின் மலகாவில் இருந்து மேட்ரிட்டுக்கு சென்ற அதிவிரைவு ரயில் அடாமுஸ் அருகே தடம்புரண்டது. எதிரே வந்த மற்றொரு ரயில் மீது மோதியதில் கோர விபத்து ஏற்பட்டது. முதல்கட்ட தகவல்படி இந்த விபத்தில் 21 பேர் உயிரிழந்தனர். மேலும் 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

காயமடைந்த அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்தில் உள்ளூர் மக்கள் உதவியுடன் மீட்புக் குழுவினர் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர். ரயிலில் பயணம் செய்த லூகாஸ் மெரியாகோ, “இது ஒரு திகில் படம் போல இருந்தது” என தெரிவித்தார்.

விபத்தை தொடர்ந்து மேட்ரிட்–அண்டலுசியா இடையிலான ரயில் சேவை முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு உதவ மேட்ரிட், செவில்லி, கோர்டோபா, மலகா, ஹுவெல்வா ரயில் நிலையங்களில் சிறப்பு உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அடிஃப் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் சம்பவ இடத்திற்கு 40 அவசரகால ராணுவ வீரர்களும், 15 வாகனங்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!