டிசம்பர் 26 முதல் ரயில் கட்டணம் உயர்வு....
டிசம்பர் 26-ம் தேதி முதல் ரெயில் கட்டணம் உயர்த்தப்படுவதாக ரயில்வே அறிவித்துள்ளது. சாதாரண வகுப்புகளில் 215 கி.மீ.க்கு மேல் பயணிப்பவர்களுக்கு கிலோ மீட்டருக்கு ஒரு பைசா கூடுதல் வசூலிக்கப்படும். 500 கி.மீ. வரை பயணிக்கும் ரயில்களில் அதிகபட்சமாக ரூ.10 மட்டுமே கட்டணம் உயர்த்தப்படுகிறது.

மெயில் மற்றும் விரைவு ரயில்களில் கிலோ மீட்டருக்கு 2 பைசா கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. இந்த கட்டண உயர்வு மூலம் ரூ.600 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என ரயில்வே தெரிவித்துள்ளது. டிக்கெட் கட்டண உயர்வு டிசம்பர் 26 முதல் அமலுக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் புறநகர் ரெயில் சேவைகளில் எந்த கட்டண உயர்வும் இல்லை. சீசன் டிக்கெட்டுகளுக்கும் கட்டணம் உயர்த்தப்படவில்லை. மேலும் சாதாரண வகுப்புகளில் 215 கி.மீ. வரை பயணிப்பவர்களுக்கு கட்டணம் மாற்றமில்லை என ரெயில்வே தெளிவுபடுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
