ரயில் ஹைஜாக்... 16 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை! 104 பயணிகள் பத்திரமாக மீட்பு!
Mar 12, 2025, 11:35 IST

பாகிஸ்தானில் குவெட்டாவிலிருந்து பெஷாவருக்கு 9 பெட்டிகளில் சுமார் 400 பயணிகளுடன் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் சென்றது. இந்த ரயிலை செவ்வாய்க்கிழமை பிற்பகல் குடாலர் மற்றும் பிரு குன்ரி மலைப்பகுதிக்கு அருகிலுள்ள ஒரு சுரங்கப்பாதையில் துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்கள் அதை வழிமறித்து ஹைஜாக் செய்தனர். இந்தத் தாக்குதலுக்கு பலுசிஸ்தான் விடுதலை ராணுவத்தினர் பொறுப்பேற்றனர்.
இந்நிலையில், தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 16 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதை பாதுகாப்பு படையினர் உறுதி செய்துள்ளனர். மேலும், சிறைபிடிக்கப்பட்ட ரயிலிலிருந்து பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 104 பயணிகளையும் அவர்கள் மீட்டதையும் உறுதிப்படுத்தியுள்ளனர்
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
From
around the
web