குட் நியூஸ்... இனி 8 மணி நேரம் முன்கூட்டியே ரயில் பயணிகள் இறுதி அட்டவணை !

 
ரயில்


 
இந்தியாவில் நடுத்தர வர்க்கத்தினர் பலரும் தொலை தூர பயணங்களுக்கு குறைவான செலவானதால் ரயில் பயணங்களையே தேர்வு  செய்து வருகின்றனர்.  இதன் காரணமாக தினமும் லட்சக்கணக்கான பயணிகள் ரயிலில் பயணம் செய்கின்றனர். இந்நிலையில் இந்திய ரயில்வே வாரியம் தற்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ரயில் டிக்கெட்
அதன்படி இனி ரயில் புறப்படுவதற்கு 8 மணி நேரத்திற்கு முன்பே இறுதி பயணிகள் அட்டவணையை தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.  டிக்கெட் உறுதியானவர்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   தற்போது வரை 4 மணி நேரத்திற்கு முன்பாக முன்பதிவு பயணிகளின் அட்டவணை தயாரிக்கப்பட்டது.

ரயில் டிக்கெட் புக்கிங்
இந்த புதிய முடிவால் காத்திருப்பவர்களின் பட்டியல் பயணிகள் முன்கூட்டியே மாற்று ஏற்பாடுகளை செய்ய முடிவடையலாம். மேலும் நிமிடத்திற்கு ஒன்றரை லட்சத்துக்கும்  அதிகமான டிக்கெட்டுகளை உருவாக்கும் திறன் கொண்ட புதிய முன்பதிவு அமைப்பை கொண்டு வரவும் திட்டமிடப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது