நாளை முதல் ரயில் சேவை தொடக்கம்... ரயில் பயணிகள் மகிழ்ச்சி!

 
ரயில்

தமிழகத்தில் தென்மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக  அதிகனமழை காரணமாக பெரும் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. வெள்ளத்தில் சிக்கித் தவித்தவர்கள் நிவாரணமுகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  வீடுகளில் உள்ள பொருட்கள் அடித்து செல்லப்பட்டும், வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்டும்  மக்கள்  பெரும் அவதிப்பட்டனர்.   கால்நடைகள் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டன.  பள்ளிகல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டன.

ரயில் ரயில்வே

தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. பேருந்து, ரயில் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி தனித்தனி தீவுகளாகின. அரசு அலுவலர்கள், தேசிய பேரிடர் மீட்பு படை , தன்னார்வலர்கள் போர்க்கால அடிப்படையில்  மீட்பு பணிகளில் ஈடுபட்டு நிவாரணப்பணிகளை மேற்கொண்டு வருகின்றன .  ரயில் தண்டவாளங்கள் நீரில் மூழ்கிவிட்டன. அனைத்தும் படிப்படியாக சீரமைக்கப்பட்டு வருகின்றன.

தூத்துக்குடி

இந்நிலையில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடியில் நாளை வெள்ளிக்கிழமை டிசம்பர் 22ம் தேதி  முதல் ரயில் சேவை தொடங்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. திருச்செந்தூரை பொறுத்தவரை இன்னும் மீட்பு பணிகள், நிவாரணப்பணிகள் நிறைவடையவில்லை.  தண்டவாளங்களில் நீரை அகற்றும் பணி நடப்பதால்   ரயில் சேவை தொடங்க ஒரு வாரம் ஆகிவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி குளிர்ல தயிர் சாப்பிடலாமா... மருத்துவம் என்ன சொல்கிறது?!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web