அதிவேக ரயிலில் கதவருகில் தொங்கிய இளைஞர் … உயிரைப் பறித்த பரிதாபம்!
சமூக வலைதளங்களில் பரவி வரும் ஒரு வீடியோ, பயணிகளின் அலட்சியம் எவ்வளவு ஆபத்தானது என்பதை மீண்டும் நினைவூட்டியுள்ளது. அதிவேகமாக சென்ற ரயிலில் இருந்து குதிக்க முயன்ற இளைஞருக்கு ஏற்பட்ட விபரீத முடிவு பார்ப்பவர்களின் மனதை உலுக்கியுள்ளது.
வீடியோவில், அந்த இளைஞர் ரயில் கதவருகே தொங்கியபடி பயணம் செய்துள்ளார். ரயில் பிளாட்பாரத்தை நெருங்கியதும் கீழே குதிக்க முயன்ற போது கைப்பிடி நழுவி, கட்டுப்பாட்டை இழந்ததாக தெரிகிறது. இதனால் அவர் ரயிலுக்கும் பிளாட்பாரத்திற்கும் இடையிலான இடைவெளியில் விழுந்துள்ளார்.
இந்த விபத்தில் அந்த இளைஞர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வீடியோவை பார்த்த பலரும், “ரயில் போனால் அடுத்தது வரும்; உயிர் போனால் திரும்பாது” என வேதனையுடன் பதிவிட்டு வருகின்றனர். இந்த சம்பவம் பாதுகாப்பற்ற பயணம் மனித உயிருக்கு எவ்வளவு பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என்பதற்கான கடும் எச்சரிக்கையாக அமைந்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
