பயணிகளின் கனிவான கவனத்திற்கு... இந்த எக்ஸ்பிரஸ் ரயில்கள் எழும்பூர் செல்லாது!

 
ரயில் எக்ஸ்பிரஸ் ரயில் எக்ஸ்பிரஸ்

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தின் 10 மற்றும் 11வது தளங்களில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய இந்த பணிகள் ஏப்ரல் மாதம் வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக புறநகர் மின்சார ரயில்கள் உள்ளிட்ட சில ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ரயில்

சென்னை எழும்பூரில் இருந்து செங்கோட்டை செல்லும் பொதிகை அதிவேக ரயில் மார்ச் 17 முதல் ஏப்ரல் 6 வரை தாம்பரம் நிலையத்திலிருந்து புறப்படும். வழக்கமாக இரவு 8.02 மணிக்கு புறப்படும் இந்த ரயில் அதே நேரத்தில் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும். அதேபோல் திருநெல்வேலியில் இருந்து சென்னை எழும்பூர் வரும் நெல்லை விரைவு ரயில் மார்ச் 16 முதல் ஏப்ரல் 5 வரை தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்.

ரயில் பயணிகள் கவனத்திற்கு.. இன்று இந்த ரயில்கள் ரத்து!!..

மேலும் சென்னை எழும்பூரில் இருந்து திருச்சி செல்லும் சோழன் அதிவேக ரயில் வழக்கமான நேரத்தை விட தாமதமாக இயக்கப்படும். மார்ச் 16 முதல் ஏப்ரல் 5 வரை இந்த ரயில் காலை 10.15 மணிக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பயணிகள் இந்த மாற்றங்களை கருத்தில் கொண்டு தங்கள் பயணத்தை திட்டமிடுமாறு ரயில்வே அறிவுறுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!