நெல்லை - மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு!

 
எக்ஸ்பிரஸ் ரயில் எக்ஸ்பிரஸ் ரயில்

பயணிகளின் வசதிக்காக நெல்லை மற்றும் மேட்டுப்பாளையம் இடையேயான சிறப்பு ரயில் சேவையை நீட்டித்து தெற்கு ரயில்வே இன்று (ஏப்ரல் 1, 2026) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த நீட்டிப்பு வரும் ஜூன் மாதம் வரை அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீட்டிக்கப்பட்ட ரயில் விவரங்கள்:

நெல்லை - மேட்டுப்பாளையம் (வண்டி எண்: 06030): நெல்லையிலிருந்து புறப்படும் இந்த சிறப்பு ரயில், வரும் ஏப்ரல் 5-ம் தேதி முதல் ஜூன் 7-ம் தேதி வரை (ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும்) தொடர்ந்து இயக்கப்படும்.

ரயில் டிக்கெட் புக்கிங்

மேட்டுப்பாளையம் - நெல்லை (வண்டி எண்: 06029): மறுமார்க்கமாக மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்படும் இந்த ரயில், ஏப்ரல் 6-ம் தேதி முதல் ஜூன் 8-ம் தேதி வரை (ஒவ்வொரு திங்கட்கிழமையும்) நீட்டிக்கப்பட்டுள்ளது.

மதுரை - கான்பூர் சிறப்பு ரயில்:
இதேபோல், கான்பூர் சென்ட்ரல் - மதுரை இடையேயான சிறப்பு ரயில் சேவையும் நீட்டிக்கப்பட்டுள்ளது:

கான்பூர் - மதுரை (வண்டி எண்: 01927): இன்று (புதன்கிழமை) முதல் மே 27-ம் தேதி வரை ஒவ்வொரு புதன்கிழமையும் இயக்கப்படும்.

மதுரை - கான்பூர் (வண்டி எண்: 01928): ஏப்ரல் 3-ம் தேதி முதல் மே 29-ம் தேதி வரை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இயக்கப்படும்.

கோடை விடுமுறை மற்றும் பயணிகளின் கூடுதல் தேவையை முன்னிட்டு இந்தச் சிறப்பு ரயில்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதால், தென் மாவட்ட பயணிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த ரயில்களுக்கான முன்பதிவு குறித்த விவரங்களை ரயில்வே இணையதளத்தில் சரிபார்த்துக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!