பயணிகள் கனிவான கவனத்திற்கு... 5 நாட்களுக்கு புறநகர் ரயில்கள் ரத்து!
சென்னை: எழும்பூர் ரயில் நிலையத்தில் 10 மற்றும் 11 ஆகிய நடைமேடைகளில் நடைபெற்று வரும் பராமரிப்புப் பணிகள் காரணமாக, கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு இடையிலான புறநகர் ரயில் சேவையில் தென்னக ரயில்வே அதிரடி மாற்றங்களைச் செய்துள்ளது. இதன்படி, ஏப்ரல் 5-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை கடற்கரையிலிருந்து தாம்பரம் செல்லும் முக்கிய இரவு நேர ரயில்கள் மற்றும் அதிகாலை ரயில்கள் முழுமையாகவும், ஒரு சில ரயில்கள் பகுதி நேரமாகவும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இரவு 11 மணிக்குப் பின் கடற்கரையிலிருந்து புறப்படும் ரயில்கள் இயங்காது என்பதால் பயணிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கோடைகாலம் தொடங்கிவிட்ட நிலையில், வேலைக்குச் செல்லும் ஊழியர்களும் மாணவர்களும் இந்த திடீர் ரத்து நடவடிக்கையினால் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கூட்ட நெரிசலைக் குறைக்க மாற்று ஏற்பாடுகள் செய்யப்படாததால், இயக்கப்படும் ஒரு சில ரயில்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. திருமால்பூர் மற்றும் செங்கல்பட்டில் இருந்து கடற்கரை வரும் ரயில்கள் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும் எனவும், அங்கிருந்து கடற்கரைக்கு ரயில் சேவை இருக்காது எனவும் ரயில்வே நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது.

பராமரிப்புப் பணிகள் நடக்கும் நாட்களில் ஒரு சில ரயில்களின் புறப்படும் நேரமும் 10 நிமிடங்கள் வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதிகாலை 3.55 மற்றும் 4.35 மணிக்குத் தாம்பரம் மற்றும் கடற்கரையிலிருந்து புறப்படும் ரயில்கள் 10 நிமிடங்கள் தாமதமாகப் புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையங்களில் நிலவும் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, பயணிகள் தங்களது பயண நேரத்தை முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த தற்காலிக மாற்றங்கள் வரும் 8-ம் தேதி வரை தொடரும் என்பதால் புறநகர் பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
