தென் மாவட்ட பயணிகளின் கனிவான கவனத்திற்கு... 6 ரயில்கள் ரத்து... திருச்சி ரயில்வே கோட்டம் அறிவிப்பு!

 
ரயில் எக்ஸ்பிரஸ்
 

திருச்சி ரயில்வே கோட்டத்தில் பராமரிப்பு மற்றும்  சாலை மேம்பாலம் அகற்றுதல் மற்றும் பொறியியல் பணிகள் காரணமாக, இன்று அந்த வழியாக செல்லும் ரயில் சேவைகள் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி கரூர் - திருச்சி பயணிகள் ரயில் (வண்டி எண்: 76810), திருச்சி - கரூர் பயணிகள் ரயில் (வண்டி எண்- 76809), திருச்சி - ஈரோடு பயணிகள் ரயில் (வண்டி எண்- 56105), மயிலாடுதுறை - சேலம் பயணிகள் ரயில் (வண்டி எண்- 16811), சேலம் - மயிலாடுதுறை பயணிகள் ரயில் (வண்டி எண்- 16812), ஈரோடு - திருச்சி பயணிகள் ரயில் (வண்டி எண்- 56810) உட்பட பல ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.  

எக்ஸ்பிரஸ் ரயில்

இதேபோல் ஈரோடு - திருச்சி பயணிகள் ரயில் (வண்டி எண்- 56106) ஈரோட்டில் இருந்து காலை 8.10 மணிக்கு புறப்படும். இந்த ரயில் கரூர் வரை மட்டுமே செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாலக்காடு - திருச்சி எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்- 16844) கரூர் வரை மட்டும் இயங்கும். மேலும் திருச்சியில் இருந்து பிற்பகல்  1 மணிக்கு புறப்படும் திருச்சி - பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்- 16843) திருச்சி - கரூர் இடையே ரத்து செய்யப்பட்டு கரூரில் இருந்து பிற்பகல் 2.20 மணிக்கு புறப்பட்டு செல்லும்.

ரயில்

காரைக்கால் - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்- 16187) காரைக்காலில் இருந்து மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு திருச்சி, திண்டுக்கல், கரூர் வழியாக மாற்றுப்பாதையில் எர்ணாகுளத்திற்கு செல்லும். கடலூர் - மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்- 16231) கடலூரில் இருந்து மாலை 3.40 மணிக்கு புறப்பட்டு திண்டுக்கல், கரூர் வழியாக மாற்றுப்பாதையில் மைசூருக்கு சென்றடையும். இந்த ரயில்கள் கோட்டை மற்றும் குளித்தலை ரயில் நிலையங்களுக்கு செல்லாது. இந்த தகவல் திருச்சி ரயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது